அருள் மழை பொழிவாய் அருள் மழை பொழிவாய்
அருள் மழை பொழிவாயே
கருணையின் கடலே காத்திடுமிறையே
எமக்கருள் புரிவாயே
மலிபுகழ் மருதமுனை திகழ் ஷம்ஸ் உயர்
மத்திய கல்லூரி
பல்வளம் பெற்று பாங்குடன் கல்வி
பணிபுரிந் தொளிர் தரவே
தினதருட் கருணை மழையெமில் வார்ந்து
நீழ் புவி நாம் மகிழ
உனைப் பணிந்துளமே உருகிட இரந்தோம்
எமக்கருள் புரிவாயே.... (அருள் மழை)
அலையெறி கடல் மிசை உலவிடு கலமென
அறிவெனும் ஆழியில் நாம்
இலகுடன் தவழ்ந்தே இருமையும் உயர்வுற
ஏற்றமதாம் நெறிகள்
கலை விஞ்ஞானம் தொழில் மறை
மொழி பயின்றிடும் மாணவர் நாம்
புலர் பொழுதெனவே புவிமிசை ஒளிரப்
பெரு வரந்தருவாயே.... (அருள் மழை)
அறிவினில் உயர்ந்த ஆசிரியர்கள்
அதிபர் முதுகுரவர்
திருவுளம் மகிழப் பணிவுடன் பயிலப்
பரம்பொருளே அருள்வாய்
எமதனைத் தந்தையர் எமைஈன் பொழுதின்
ஏற்றமுடன் மகிழ
நிலமா தினதருள் எனுமமுதூட்டி
நீக்கமற அருள்வாய்.... (அருள் மழை)
Composed By : Marhoom V.M.ISMAIL (Former Principal)





